News April 8, 2025

ராமநாதபுரம் அங்கன்வாடியில் வேலை ரெடி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், 38 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

Similar News

News April 24, 2025

மாணவருக்கு இராம்நாடு எம்பி வாழ்த்து

image

ராமநாதபுரம் அரண்மனை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ரஷத் என்ற மாணவர் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 52ஆவது இடமும், தமிழக அளவில் 5ஆவது இடமும் பெற்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்.23) இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஸ்ரீ ரஷத்-க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 24, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகள் போன் நம்பர்

image

இன்று (23.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.

News April 23, 2025

மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம்

image

ராமநாதபுரத்தில் மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் வணிக இணை இயக்குநர் அமுதன் தலைமை வகித்தார். வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக முதுநிலை மேலாளர்கள் பாண்டித்துரை, கவிமுகில், வேளாண் இணை, துணை இயக்குநர்கள் பாஸ்கரமணியன், கோபாலகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசன், வள்ளல் கண்ணன் உட்பட பலர் ஆலோசனை வழங்கினர்.

error: Content is protected !!