News April 8, 2025
குமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் சேவை ஆலோசகர், டெலிகாலர், ஆட்டோமேஷன் நிபுணர் உள்ளிட்ட பிரிவுகளில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் நிலையில் 18 – 59 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன்.4 க்குள் இங்கே <
Similar News
News November 2, 2025
குமரி: கேரளா விரைந்தது தனிப்படை

பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான கிருஷ்ணதாஸ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரமேஷ் மற்றும் விமல் ஆகியோர் மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். மேலும் கொலை தொடர்பாக கிருஷ்ணதாஸ் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 2, 2025
குமரி: இனி வெளிநாட்டில் வேலை பெறலாம்

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் www.nationalskillacademy.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புகளை முடித்த பிறகு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.
News November 2, 2025
குமரி சந்தைகளில் கெட்டுப் போன மீன்கள் அழிப்பு

குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த அக்.31 அன்று ஊரம்பு மீன் சந்தையில் 80 கிலோ கெட்டுப்போன செம்பள்ளி மீன்களை அழித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.1) நடைக்காவு சந்தையில் 45 கிலோ, நித்திரவிளை சந்தையில் 15 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். கெட்டுப்போன மீன்கள் விற்பனையாவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை அழிப்பது தொடரும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.


