News April 8, 2025

மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

image

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News February 24, 2026

ஓசூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

ஓசூர் அடுத்த ராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி, இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே பிப்-22 குடும்ப பிரச்னை காரணமாக கணவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் மனமுடைந்த ராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 24, 2026

கிருஷ்ணகிரி: அரசு ஊழியர் கொலை; 6 பேருக்கு ஆயுள்

image

தேன்கனிக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் (37), நிலம் விற்ற பணம் ரூ.30 லட்சத்தைத் திரும்பக் கேட்டதற்காக 2017-ல் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிகளான மகேஷ்குமார் உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும் விதித்து நேற்று (பிப்.23) தீர்ப்பளித்தது.

News February 24, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்ரவரி.23) இரவு 10 மணி முதல் இன்று (பிப்ரவரி.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர்!

error: Content is protected !!