News April 8, 2025
மதுரை அங்கன்வாடியில் வேலை ரெடி

மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
Similar News
News April 18, 2025
மதுரை : நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்துக்கள் முடக்கம்

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த FIR அடிப்படையில் விசாரணையை துவங்கிய அமலாக்கத்துறை இன்று, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியோமேக்ஸின் சொத்துக்களை முடக்கியது.சென்னை மண்டல அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் உள்ள அசையும்-அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.
News April 18, 2025
மதுரையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 18) 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News April 18, 2025
மதுரை மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0452 –2546100
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்