News April 8, 2025
தங்க நகையை பத்திரமாக ஒப்படைத்த சிறுமிகள்

திருத்தணி முருகன் கோயிலில், நேற்று (ஏப்ரல் 7) திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் பார்க்கிங் பகுதியில் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்க காப்பு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுமிகள் பத்திரமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகையை தவறவிட்ட பக்தர் போலீசாரிடம் வந்து புகார் அளிக்க வந்தபோது, போலீசார் அந்த நகைகளை ஒப்படைத்து சிறுமிகளை பாராட்டி வாழ்த்தினர். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 22, 2025
திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று (ஆக. 22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10th, 12th, டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. <
News August 22, 2025
திருவள்ளூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 21, 2025
திருவள்ளூர் இரவு செல்லும் ரோந்து போலீசார் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.