News April 8, 2025
ஈரோட்டிற்கு உள்ளூர் விடுமுறை

ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க.)
Similar News
News April 17, 2025
ஈரோடு: தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை!

ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 16, 2025
ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ்அப் மூலம் மோசடி நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி நபர்கள், போலி வாட்ஸ்அப் அழைப்புகள், செய்திகள் மூலம் பயனர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், பயனர்கள் தங்கள் OTP, தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் குற்றங்களை புகாரளிக்க 1930 (24×7) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News April 16, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக மகுடேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.