News April 8, 2025

தமிழில் பெயர் பலகை வைக்க கால அவகாசம் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க (மே.15) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 15, 2026

தஞ்சை: பொங்கல் சீர் கொண்டு சென்றவர் பரிதாப பலி

image

ஒரத்தநாடு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு (49), தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு பொங்கல் சீர் கொடுக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சிற்றம்பலம் அம்மாகுளம் அருகே எதிரே வந்த கார் மோதியதில், திருநாவுக்கரசு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 15, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 முதல் இன்று (ஜன. 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 14, 2026

தஞ்சாவூர்: செல்வத்தை அள்ளித் தரும் கோயில்!

image

பேராவூரணி அடுத்த விளங்குளம் பகுதியில் அட்சயபுரீஸ்வரர் எனும் சிவன் கோயில் உள்ளது. இந்த சிவாலயத்தில் நுழைந்தாலே ஒருவர் செய்த பாவம் அனைத்தும் விளகும் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவனை வழிபட்டால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுளை பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்க

error: Content is protected !!