News April 8, 2025
சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ₹818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ₹50 உயர்ந்து ₹868.50-க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை உயர்வு அமலாகியுள்ளது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ₹568.50 ஆகவும் விற்பனையாகிறது.
Similar News
News August 31, 2025
ராமநாதபுரம்: EXAM இல்லை ரயில்வேயில் 2,418 பணியிடங்கள்

ராமநாதபுரம் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 31, 2025
நாளை முதல் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம்.. அரசு அறிவிப்பு

TASMAC கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக பெற்று, பாட்டிலை திருப்பி தரும்போது ₹10 ஒப்படைக்கப்படும். நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் பற்றி உங்கள் கருத்தென்ன?
News August 31, 2025
பிரிக்ஸ் நாடுகளை மிரட்டிய டிரம்ப்.. புடின் எடுத்த முடிவு

பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா பாரபட்சமாக செயல்படுவதாக புடின் விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% வரிவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யா, சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளன.