News April 8, 2025
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
Similar News
News October 29, 2025
சூரியன் மறைந்த பின் இந்த 5 விஷயங்களை செய்யாதீங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் படி, வீட்டில் துரதிர்ஷ்டம் சேருவதை தவிர்க்க, சூரியன் மறைந்த பிறகு இந்த 5 விஷயங்களை பண்ணக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது ✱நகம் வெட்டக்கூடாது ✱துளசி செடிக்கு நீருற்ற கூடாது ✱பூக்கள், இலைகளை பறிக்கக்கூடாது ✱பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் கொடுக்க கூடாது ✱கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்க கூடாது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
சற்றுமுன்: விஜய் முக்கிய அறிவிப்பு

வரும் 5-ம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, விவாதித்து முடிவெடுக்க பொதுக்குழுவை கூட்டுவதாக விஜய் தெரிவித்துள்ளார். கள நிலவரம் தவெகவுக்கு சாதகமாக இருப்பதால், அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும், தீர்க்கமாகவும் எடுக்க வேண்டி உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
News October 29, 2025
பெண்களே இந்த நேரத்துல காஃபி குடிக்காதீங்க!

பொதுவாகவே காஃபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு அது Addict. ஆனால் காஃபியை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிலும் பெண்கள் சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். *கர்ப்ப காலத்தில் குடிக்க கூடாது. *தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் காஃபியை தவிர்க்க வேண்டும் *மாதவிடாய் காலத்தில் குடித்தால் மன அழுத்தம் அதிகமாகும் *ரத்தசோகை உள்ளவர்கள் குடிக்க கூடாது.


