News April 8, 2025
குறைந்த செலவில் சுற்றுலா செல்லலாமே…

இந்த அவசர உலகில் சுற்றுலா செல்ல யாருக்குத்தான் பிடிக்காது. ஒரு நாள், 2 நாள் விடுப்பு கிடைத்தால்கூட குறைந்த பட்ஜெட்டில் எளிதாக சென்றுவரக்கூடிய பல சுற்றுலா தலங்கள் நம் தமிழ்நாட்டிலேயே உள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் உள்ள குருசடை தீவு, சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு ஏரி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குண்டாறு அணைக்கட்டு உள்ளிட்ட மனதிற்கு இதமளிக்கும் பல இடங்கள் தமிழகத்தில் உள்ளன.
Similar News
News October 28, 2025
World சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) $119 குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ₹10,492 குறைந்துள்ளது. கடந்த 22-ம் தேதி $240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் பெரிய அளவில் சரிந்து $3,994-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
News October 28, 2025
உள்நோக்கத்துடன் ஒருநாள் முன்னர் தான் அனுமதி: தவெக

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஒருநாள் முன்னர்தான் உள்நோக்கத்துடன் அனுமதி அளிக்கப்பட்டதாக தவெக, சென்னை HC-ல் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, முன்கூட்டியே அனுமதி அளித்தால் அசம்பாவிதங்கள் நடைபெறாது என கூறியது. நிபந்தனைகள் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டியது. இதையடுத்து எல்லா கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என HC அறிவுறுத்தியுள்ளது.
News October 28, 2025
சனி தோஷத்தை விரட்ட..

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ
சனிப் ப்ரசோதயாத்
பொருள்:
ஓம், கொடியில் காக்கையை வைத்திருப்பவரை நினைத்துப் பார்க்கட்டும், ஓ, உள்ளங்கையில் வாளை ஏந்தியவரே, சனீஸ்வரர் என் எண்ணங்களை ஒளிரச் செய்யுங்கள். SHARE IT.


