News April 8, 2025
மும்பை தாக்குதல் குற்றவாளி.. US நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று மும்பை தாக்குதல் குற்றவாளியான தஹவ்வூர் ராணா அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தஹவ்வூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு கொண்ட ராணா அமெரிக்காவில் கடந்த 2009-ல் பிடிபட்டார்.
Similar News
News April 17, 2025
அவருக்காக அதை செய்தேன்: ரோஹித்

கடந்த ஜனவரியில் நடந்த ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியில் இருந்து வெளியேறியது குறித்து ரோஹித் மனம் திறந்துள்ளார். அந்த போட்டியில் தான் சரியாக விளையாடாததால், 4 போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கில்லுக்கு வாய்ப்பு வழங்க கோரி பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவிடம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அணிக்கு என்ன தேவையோ அதையே அனைவரும் செய்ததாகவும் கூறியுள்ளார்.
News April 17, 2025
கோடை விடுமுறை சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், சுற்றுலாவின்போது எவ்வற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பலருக்கு தெரியவில்லை. குறிப்பாக, செல்லும் இடங்களின் பாரம்பரியம், உள்ளூர் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். காடு, மலை சார்ந்த பகுதிகள் எனில், பறவைகள், பிற உயிரினங்களின் வாழ்வியலில் குறிக்கிடக் கூடாது. குறிப்பாக, செல்ஃபி எடுத்தல் போன்றவை தவிர்க்கவும்.
News April 17, 2025
பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்கக்கோரி வழக்கு

சைவம் மற்றும் வைணவம் மதங்களை பெண்களுடன் ஒப்பிட்டு, அமைச்சர் பொன்முடி மிக மோசமாக பேசினார். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பும் கோரினார். ஆனாலும், அவரை பதவி நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஐகோர்டில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.