News April 8, 2025
சோகத்தில் மூழ்கிய ஹர்திக்

RCB-க்கு எதிரான ஆட்டத்தில் 222 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய MIக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பின்னர் திலக்குடன் இணைந்த ஹர்திக் வாணவேடிக்கை காட்டி அசத்தினார். 15 பந்துகளில் 42 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். ஆனால் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விழுந்ததால் MI தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த போது ஹர்த்திக் மிகவும் சோகமாக இருக்கும் காட்சிகளை காணமுடிந்தது.
Similar News
News October 18, 2025
பைசன் படத்தை தடை செய்ய வேண்டும்: ஹரி நாடார்

நேற்று ரிலீஸான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ், தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டும் விதமாக படம் எடுப்பதாக ஹரி நாடாரின் சத்திரிய சான்றோர் படை கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஹரி நாடார் கோரிக்கை வைத்துள்ளார்.
News October 18, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள் இம்மாதமே வழங்கப்பட உள்ளது. பருவமழை தொடங்கி இருப்பதால் முன்கூட்டியே வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில், இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் பொருள்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து, தீபாவளி(அக்.20) முடிந்த பிறகு நவம்பருக்கான ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. SHARE IT
News October 18, 2025
10 நிமிடத்தில் தீபாவளிக்கு ரவா லட்டு ரெடி!

தீபாவளி நெருங்கிவிட்டது.. வீட்டில் இன்னும் ஒரு பலகாரம் கூட செய்யவில்லையே என்று கவலைப்படாதீர்கள். 10-15 நிமிடத்திற்குள் ஈஸியாக செய்யக்கூடிய, எல்லோருக்கும் பிடித்தமான ரவா லட்டு செய்முறை பகிரப்பட்டுள்ளது. 10க்கும் குறைவான பொருள்களை கொண்டு ரவா லட்டு தயார் செய்து ருசிக்கலாம். செய்முறையை SWIPE செய்து பார்க்கவும்.