News April 8, 2025
பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடாதீர்கள்: சீமான்

போராட்டக்களத்தில் தலைவனை தேடுங்கள், பொழுதுபோக்கு தளத்தில் அல்ல என சீமான் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு, கேளிக்கையில் நாட்டம் கொண்ட மக்களை புரட்சிக்கு தயார் செய்வது கடினம் எனவும், கேளிக்கை வேறு, போராட்டம், புரட்சி வேறு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது, உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
PSL-ல, IPL-ல எது பெஸ்ட்? – தெளிவான பதில்

PSL-லில் Lahore Qalandars அணிக்காக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் விளையாடி வருகிறார். அவரிடம் IPL மற்றும் PSL இரண்டிலும் விளையாடியுள்ளீர்கள், இதில் எது சிறந்த லீக் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு IPL-லை மற்ற லீக்குகளுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அனைத்துமே IPL-லுக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
News April 17, 2025
2026 தேர்தல்.. விஜய்யால் சீமான் வாக்கு சரியுமா?

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி உருவாகுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. DMK+, ADMK- BJP+, TVK, NTK என நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளதால், இந்த தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக, இதுவரை இளைஞர்களை கவர்ந்து 8% வாக்குகள் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ள நாதகவின் வாக்கு சதவீதம் விஜய் வருகையால் குறையும் என கூறப்படுகிறது.
News April 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!