News April 8, 2025
தம்பியின் கண்முன்னே 10 வயது சிறுமி தற்கொலை!

தாய் திட்டியதற்காக 10 வயது சிறுமி, தம்பியின் கண்முன்னே தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த கெளசல்யா கூலி வேலைக்கு சென்ற நிலையில், தனது மகளிடம் வீட்டு வேலையை செய்யக் கூறியுள்ளார். ஆனால், அதனை செய்யாமல் சிறுமி, விளையாடிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலிலிருந்த ரோஷினி (10) தனது 5 வயது தம்பியின் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொண்டார். பெரும் சோகம்..!
Similar News
News April 8, 2025
TN பல்கலை.களுக்கு இனி கவர்னர் வேந்தர் இல்லை

TN பல்கலைக்கழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக MP வில்சன் தெரிவித்துள்ளார். கவர்னருக்கு பதில் பல்கலை.களுக்கு TN CM–ஐ வேந்தராக்கும் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை குறிப்பிட்டு பேசிய அவர், இனி கவர்னர் வேந்தர் இல்லை என கூறியுள்ளார். TN பல்கலை.களுக்கு இனி அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் எனவும் தெரிவித்தார்.
News April 8, 2025
தங்கையை காதலித்ததால் ஆத்திரம்.. இளைஞர் கொலை!

நெல்லை டவுன் பகுதியில் நள்ளிரவில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இளைஞர் ஆறுமுகம் என்பவரை வெட்டிக் கொன்று, உடலை புதைத்துவிட்டு தப்பியோடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தங்கையை காதலித்ததால், ஒரு வருடம் பிளான் செய்து ஆறுமுகத்தை கொலை செய்ததாக கைதானவர்களில் ஒருவரான விஷால் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2025
ஃபேன்சி நம்பருக்கு ₹45.99 லட்சம்!

வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர் வாங்க பலர் ஆர்வம் காட்டுவார்கள். சில ஆயிரம் வரை கூட அதற்காக செலவு செய்ய தயாராக இருப்பார்கள். ஆனால், கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ₹45.99 லட்சம் செலவு செய்திருக்கிறார். KL 07 DG 0007 என்ற நம்பர் பிளேட் RTOவில் ஏலம் விடப்பட்டபோது, 5 போட்டியாளர்களை தோற்கடிக்க, இவ்வளவு தொகை கொடுத்திருக்கிறார். இந்தியாவிலேயே இது தான் அதிக விலைக்கு போன நம்பர் பிளேட்டாம்!