News April 8, 2025
IPL BREAKING: RCB அணி த்ரில் வெற்றி

மும்பை அணிக்கு எதிரான த்ரில்லான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்கிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி மும்பை அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்து ஆடிய மும்பை அணி வீரர்கள் பாண்டியா & திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென சரிந்ததால் இறுதி ஓவர் வரை போராடி மும்பை தோல்வியைத் தழுவியது.
Similar News
News August 13, 2025
தோனிக்கு பதில் யார்? பட்டியலில் 5 வீரர்கள்

2026 IPL சீசனில் தோனி விளையாடுவாரா (அ) பாதியில் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி கிரிக்கெட் அரங்கில் ஒலித்துக் கொண்டே உள்ளது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் CSK-வின் அடுத்த வி.கீ., பேட்ஸ்மேனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற பட்டியலும் தயாராகி வருகிறதாம். இதில் சஞ்சு சாம்சன் (RR), உர்வில் படேல் (CSK), ரஹ்மானுல்லா குர்பாஸ் (KKR), இஷான் கிஷன் (SRH) , நாராயண் ஜெகதீசன் (KKR) ஆகியோர் உள்ளனர்.
News August 13, 2025
ரஜினி ஒரு அபூர்வ ராகம்! குவியும் வாழ்த்துக்கள்

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தனது வாழ்த்தை தெரிவித்த வைரமுத்து, ரஜினி ஒரு அபூர்வ ராகம் என தெரிவித்துள்ளார். அதேபோல் DCM உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன், செல்வப்பெருந்தகை, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
News August 13, 2025
சில்லறை பணவீக்கம் கடும் சரிவு.. ஜாக்கிரதையாக இருங்க

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டில் சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைந்துள்ளது. அரசின் CPI(consumer price index) அறிக்கையின்படி ஜூன் மாதத்தில் 2.1% ஆக இருந்த பணவீக்கம், ஜூலையில் 1.55% ஆக குறைந்தது. 2017 ஜூன் மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 2% கீழ் குறைவது இதுவே முதல்முறையாகும். பொதுவாக பணவீக்கம் குறைந்தால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதோடு வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.