News April 8, 2025
தருமபுரி மாவட்ட குறைத்தீர் கூட்டம் நிறைவு

தருமபுரி மாவட்டத்தில் (07/04/25) இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 808 மனுக்களை வழங்கியுள்ளனர். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News November 8, 2025
தர்மபுரி:ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவ:8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 8, 2025
தர்மபுரி:வயிற்று வலியால் விஷத்தைத் தின்ற பெண் பலி!

மொரப்பூர் அருகே உள்ள கீழ்மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் ( 55). இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததால், மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2-ஆம தேதி வீட்டில் இருந்த விஷத்தை தின்று மயங்கி உள்ளார். இதையறிந்ததும் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு நேற்று அவர் உயிரிழந்தார்.
News November 8, 2025
பாலக்கோட்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை காலியிடம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் செயல்படும் 145, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28.11.2025 வரை நீடிக்கப்பட்டு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


