News April 8, 2025

சீனாவுக்கு வரி மேல் வரி

image

மற்ற நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வரும் வரியால் பெரும் வர்த்தகப் போரே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனா மீது மேலும் 50% வரி விதித்து அதிர்ச்சியளித்திருக்கிறார் டிரம்ப். இதனால், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு 84% வரி செலுத்த வேண்டும். அமெரிக்காவுக்கு சீனா 34% வரி விதித்த அடுத்த நாளே தனது வரியை உயர்த்தியிருக்கிறார் டிரம்ப்.

Similar News

News October 20, 2025

தபால் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

image

தபால் துறை ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசை மோடி அறிவித்துள்ளார். 2024 – 2025 நிதியாண்டிற்கான போனஸ் வரவு (PLB) வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 நாள்கள் சம்பளம் போனஸாக கிடைக்கும். குரூப் C, GDS, தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த போனஸ் வழங்கப்படும். இது தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பொருளாதார ரீதியாக உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News October 20, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெள்ளி

image

*ஜூனியர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தான்வி சர்மா வெள்ளி வென்றார். *புரோ கபடியில் யு மும்பா டை பிரேக்கரில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், அரையிறுதிக்கு 3-வது அணியாக இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. *ஆசிய யூத் கேம்ஸ், 70 கிலோ குராஷ் தற்காப்பு கலையில் இந்தியாவின் குஷி வெண்கலம் வென்றார்.

News October 20, 2025

அட்லீ ஒரு ‘King of Masala’: ரன்வீர் சிங்

image

‘மெர்சல்’ படம் பார்த்த பிறகு, ‘நீங்கள் மும்பைக்கு வந்தால், நாம் இருவரும் இணைந்து மாஸான படத்தை கொடுக்கலாம்’ என்று அட்லீக்கு மெசேஜ் அனுப்பியதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படத்தில் ரன்வீரின் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இந்த பட செட்டுக்கு சென்ற ரன்வீர், ‘King of Masala’ என்று அட்லீயை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

error: Content is protected !!