News April 8, 2025

நாேயில்லாமல் வாழனுமா? சந்திரபாபு நாயுடு அட்வைஸ்

image

நோயில்லாமல் வாழ உப்பு, எண்ணெய், சர்க்கரை பயன்பாட்டை குறைக்க ஆந்திர CM சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார். தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும், தினமும் அரை மணி நேரம் மெடிடேசன், பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 4 பேர் கொண்ட குடும்பம் மாதத்திற்கு 600 கிராம் உப்பு, 2 லிட்டர் சமையல் எண்ணெய், 3 கிலோ சர்க்கரை பயன்படுத்தினாலே போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 8, 2025

அரசு மானியத்தில் வழங்கப்படும் நீதி விவரம்

image

அரசு மானியத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செம்மறி ஆடு ,வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ‌10.00 லட்சம் முதல் ரூ. 50.00 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15.00 லட்சம் முதல் ரூ. 30.00 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது என ஆட்சியர் தகவல்.

News April 8, 2025

தங்கம் விலை 5 நாள்களில் ₹2,680 குறைந்தது

image

கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ₹200, இன்று ₹480 என கடந்த 5 நாள்களில் மட்டும் ₹2,680 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை 5 நாள்களில் கிராமுக்கு ₹10, கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளது. வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் குறையும் என்பதால், நகை பிரியர்கள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News April 8, 2025

சூரிய நமஸ்காரத்தில் சாதனை… பழங்குடி மாணவர்கள் அசத்தல்!

image

சூரிய நமஸ்காரத்தில் புதிய சாதனையை படைத்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. அல்லூரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில், ஒரே நேரத்தில் 21,850 பழங்குடியின மாணவர்கள் ஒன்றாகக் கூடியுள்ளனர். அவர்கள் 108 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர். சூரிய பகவானுக்கான முழக்கங்களால் மைதானமே அதிர்ந்தது. சாதனைக்கான சான்றிதழ் கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!