News April 8, 2025
ஹீரோயினாகும் குஷ்பூ மகள்?

குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இவருடைய போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்தது. அப்போது முதலே சினிமாவில் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஒருவேளை அவர் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தால், தனது அம்மாவை போல், முன்னணி நடிகையாக வலம்வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Similar News
News April 8, 2025
தமிழ்நாடு கவர்னர் மாற்றம்?

தமிழ்நாடு கவர்னர் R.N.ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது உள்பட பல விவகாரங்களில் திமுக அரசுக்கு R.N.ரவி பெரும் தலைவலியாக இருந்தார். ஆனால், அரசு தொடர்ந்த வழக்கில், கவர்னருக்கு எதிராக தீர்ப்பளித்து சுப்ரீம் கோர்ட் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், அவர் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
News April 8, 2025
வக்ஃப் சட்டம்: பிடிபி MLA குண்டுக்கட்டாக வெளியேற்றம்

ஜம்மு காஷ்மீர் பேரவையில் 2வது நாளாக அமளி ஏற்பட்டது. வக்ஃப் சட்டம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் பிடிபி MLA வஹீத் பாரா அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். இதையடுத்து அவை காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். காஷ்மீரில் வக்ஃப் சட்டம் குறித்து விவாதிக்க முடியாதது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்தார்.
News April 8, 2025
பேரறிவாளன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு

கவர்னருக்கு எதிரான வழக்கில், பேரறிவாளன் மற்றும் சூப்ரா வழக்குகளை மேற்கோள் காட்டி SC தீர்ப்பளித்துள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டப்பிரிவு 200ன்படி, மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும்தான் கவர்னர் செயல்பட முடியுமா அல்லது சுயேச்சையாக முடிவு செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.