News April 8, 2025

பொதுமக்களிடம் இருந்து 620 புகார் மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை என 620 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News April 8, 2025

தஞ்சை அருகே வேலை வாய்ப்பு

image

திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க

News April 8, 2025

தமிழில் பெயர் பலகை வைக்க கால அவகாசம் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க (மே.15) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 7, 2025

பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை குபேரபுரீஸ்வரர் கோயில்

image

தஞ்சை வெண்ணாற்றின் தெற்கு கரையோரம் அமைந்துள்ளது இந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில். குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள இறைவன் குபேரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தீபாவளி திருநாளிலும், பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என கூறப்படுகிறது. இதை SHARE செய்யவும்

error: Content is protected !!