News April 7, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் பதில்

TN முழுவதும் இன்னும் சில நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், காலநிலை மேலாண்மை குழு பரிந்துரை அடிப்படையில், பள்ளி திறப்பு குறித்தும், விடுமுறை நீட்டிப்பு குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.
Similar News
News April 8, 2025
வக்ஃப் சட்டம்: பிடிபி MLA குண்டுக்கட்டாக வெளியேற்றம்

ஜம்மு காஷ்மீர் பேரவையில் 2வது நாளாக அமளி ஏற்பட்டது. வக்ஃப் சட்டம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் பிடிபி MLA வஹீத் பாரா அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். இதையடுத்து அவை காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். காஷ்மீரில் வக்ஃப் சட்டம் குறித்து விவாதிக்க முடியாதது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்தார்.
News April 8, 2025
பேரறிவாளன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு

கவர்னருக்கு எதிரான வழக்கில், பேரறிவாளன் மற்றும் சூப்ரா வழக்குகளை மேற்கோள் காட்டி SC தீர்ப்பளித்துள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டப்பிரிவு 200ன்படி, மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும்தான் கவர்னர் செயல்பட முடியுமா அல்லது சுயேச்சையாக முடிவு செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
News April 8, 2025
ஒரேஆண்டில் 12 படங்கள் ரிலீஸ்: 19 வயதில் நடிகை மரணம்!

இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை செய்திருப்பவர் திவ்ய பாரதி. பாலிவுட் உலகில் கொடிகட்டி பறந்த அவரது நடிப்பில் 1992-ல் மட்டும் 12 படங்கள் ரிலீசாகியுள்ளன. தமிழில் ‘நிலா பெண்ணே’ படத்திலும் நடித்துள்ளார். தனது 19-வது வயதில், 1993-ல் இதே மாதத்தில்தான் அவர் உயிரிழந்தார். வீட்டு பால்கனியில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இவரை நினைவிருக்கிறதா?