News April 7, 2025
GBU திரைப்படத்திற்கு U/A சான்று

அஜித்குமார், திரிஷா நடிப்பில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘Good, Bad, Ugly’ படத்திற்கு U/A சான்று வழங்கியிருக்கிறது தணிக்கை வாரியம். மொத்தம் 140 நிமிடங்கள் 15 நொடிகள் கொண்ட இப்படத்தை 139 நிமிடங்கள் 52 நொடிகளாக குறைக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளது. மேலும், 1 நிமிடம் 41 நொடிகளுக்கான காட்சியை மாற்றவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இறுதியில் U/A சான்றுடன் படம் வெளியாகவுள்ளது.
Similar News
News September 14, 2025
அனைத்து பள்ளிகளிலும் நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 6 – 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9 & 10ம் வகுப்பு செப்.15-26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.26 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறையாகும். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு Way2News சார்பில் வாழ்த்துக்கள்!
News September 14, 2025
RECIPE: ஹெல்தியான ராகி லட்டு!

ராகி லட்டு கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்தை அளிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➤1 தேக்கரண்டி நெய்யில், 1 கப் கேழ்வரகு மாவை வறுக்கவும்.
➤இதில் ஏலக்காய் பொடி, வேர்க்கடலையை சேர்த்து கலக்கவும்.
➤அதேபோல, வெல்லத்தை அரை கப் தண்ணீர் விட்டு, காய்ச்சி கொள்ளவும்.
➤காய்ச்சிய வெல்லப்பாகை மாவில் கலந்து உருண்டைகளாக பிடித்து எடுத்தால், சுவையான சத்தான ராகி லட்டு ரெடி. SHARE.
News September 14, 2025
பத்தே நிமிடங்களில் நிகழ்ந்த பேரதிர்ச்சி

உங்களுக்கு மெசேஜ் செய்த ஒருவர், அடுத்த 10-வது நிமிடத்தில் உயிருடனே இல்லை என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இது நிஜ வாழ்விலும் நடந்துள்ளது. சரியாக காலை 8:37 மணிக்கு ஊழியர் லீவ் கேட்க, மேனேஜரும் அப்ரூவ் கொடுத்துள்ளார். சரியாக 8:47 மணிக்கு ஊழியர் மாரடைப்பால் இறந்துள்ளார் என்ற துயரச் செய்தியே வந்துள்ளது. ஆனால், அவருக்கு புகை பிடித்தல், மது குடித்தல் என்ற எந்த பழக்கமும் இல்லையாம். So Sad..