News April 7, 2025
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் காளையார்கோவில் வட்டம் பரமக்குடி மெயின் ரோடு வெள்ளையம்பட்டி பாஸ்டின் நகரில் அமைந்துள்ள A.S.கார்டன் மஹாலில் வரும் 16ஆம் தேதி பிற்பகல் 04 மணி முதல் 06 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 12, 2025
நிறுவனங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் 02.07.2024 தேதிக்கு பின்னர் புதிதாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு 10 அல்லது 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பதிவிற்கான விண்ணப்பத்தினை தொழிலாளர் நலத்துறையின் இணையவழி தளமான https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 12, 2025
இரண்டு கைகளுடன் காணப்படும் பிள்ளையார்

உலகில் இரண்டு கைகளுடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் அதிகமான பிற்கால அணிகலன்களுடன் காணப்படுகிறது. சிற்பத்தை வடிவமைத்த காலம் ஏறக்குறைய கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது. Share It.
News April 12, 2025
ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு.!

சிவகங்கை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் வரும் 30ஆம் தேதிக்குள் விரல் ரேகை பதிவேற்றம் (e-KYC) செய்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஏப்.12) தெரிவித்துள்ளார்.