News April 7, 2025
டிரம்ப் முடிவால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்

டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. சீன இறக்குமதிகளுக்கு 54%, வியட்நாம் பொருள்களுக்கு 46% USA-வில் வரி விதிக்கப்படுவதால், அந்நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு (26% வரி) மாற்ற அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. USA- பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை எவ்வாறு அமையும் என்பதை பொறுத்து இந்த மாற்றம் நிகழும்.
Similar News
News April 17, 2025
கடன் தொல்லையை விரட்டும் விநாயகரின் மூல மந்திரம்

காலை பிரம்ம முகூர்த்த வேளையில் விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’
News April 17, 2025
நகைச்சுவை மன்னன் விவேக் மறைந்த நாள்..

2021-ல் இதே தேதியில் தான் ( ஏப்ரல் 17) நகைச்சுவை மன்னன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மறைந்தார். அவர் இல்லையென்றாலும், காமெடிகள் மூலம் இன்றும் நம் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அவர் வாழ்ந்த நாள்களில் பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டார். அவரின் கடைசி ஆசை அனைவரும் மரம் நட வேண்டும் என்பது. எனவே, இன்று அவரின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்துங்கள்.
News April 17, 2025
இபிஎஸ் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்: செம்மலை

இபிஎஸ் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை நிரூபித்துள்ளார் என்று செம்மலை தெரிவித்துள்ளார். பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பாஜக உடன் கூட்டணி அமைத்தது ஆரம்பம் மட்டும் தான். இனி தான் ஆட்டமே இருக்கிறது. யார் யார் அதிமுக கூட்டணியில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் பதற்றப்படுகிறார்கள் எனக் கூறிய அவர், திமுகவின் ஊழலை வைத்துதான் தேர்தல் பிரச்சாரம் இருக்கும் என்றார்.