News April 7, 2025
BREAKING: விராட் கோலி அதிரடி அரை சதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அதிரடியாக அரை சதம் விளாசியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், படிக்கல், கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. கோலி 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார்.
Similar News
News April 8, 2025
சற்றுநேரத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், கிடப்பில் போட்டதாக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.
News April 8, 2025
தங்கம் விலை 5 நாள்களில் ₹2,680 குறைந்தது

கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ₹200, இன்று ₹480 என கடந்த 5 நாள்களில் மட்டும் ₹2,680 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை 5 நாள்களில் கிராமுக்கு ₹10, கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளது. வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் குறையும் என்பதால், நகை பிரியர்கள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News April 8, 2025
சூரிய நமஸ்காரத்தில் சாதனை… பழங்குடி மாணவர்கள் அசத்தல்!

சூரிய நமஸ்காரத்தில் புதிய சாதனையை படைத்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. அல்லூரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில், ஒரே நேரத்தில் 21,850 பழங்குடியின மாணவர்கள் ஒன்றாகக் கூடியுள்ளனர். அவர்கள் 108 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர். சூரிய பகவானுக்கான முழக்கங்களால் மைதானமே அதிர்ந்தது. சாதனைக்கான சான்றிதழ் கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது.