News April 7, 2025
மதுரை: தகாத உறவினால் தூக்கிட்டு தற்கொலை

மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், சீகுபட்டியை சேர்ந்த பால்பாண்டி மனைவி மயிலம்மாள்(43) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட 10வயது மூத்த பெண்ணிடம் இவர் தொடர்பில் இருந்ததை உறவினர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இருவரும், மயிலம்மாள் வீட்டு அருகே இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை.
Similar News
News April 11, 2025
முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.www.tn.gov.in என்ற இணையத்தில் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.
News April 11, 2025
கரடிக்கல்லில் லாரியை திருடி சென்ற கும்பல்

மதுரை மீனாம்பாள்புரம் நல்லதம்பி 44. ஆட்டு வியாபாரியான இவர் சொந்தமாக லாரி வைத்திருந்தார். ஏப்.,5ல் கரடிக்கல் அருகே உள்ள உறவினரின் பெட்ரோல் பங்க் பின்புறம் லாரியை நிறுத்தியிருந்தார். நேற்று லாரியை எடுக்க டிரைவர் மாரியப்பன் அங்கு சென்றபோது லாரி மாயமாகியிருந்தது. நல்லதம்பி புகாரில் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.லாரி வைத்திருப்போருக்கு SHARE செய்து கவனமாக இருக்க சொல்லுங்க.
News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.