News April 7, 2025

விருதுநகர் மாவட்டம் வரலாற்று சாதனை

image

கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் பிரசவ கால தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2021- 22 இல் 1 லட்சம் பிரசவங்களில் 90 தாய்மார்கள் உயிரிழந்த நிலையில், 22-23இல் 52 ஆகவும், 23-24இல் 45 ஆகவும் குறைந்துள்ளது. விருதுநகரில் 23-24இல் 7991 பிரசவங்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு வரலாற்று சாதனையாகும். நாட்டில் முதன்முறையாக விருதுநகர் தாய் இறப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2025

டூவிலரில் சேலை சிக்கியத்தில் பெண் உயிரிழப்பு

image

சிவகாசியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் நேற்று காலை அவரது உறவினரின் மகன் மணிகண்டன் என்பவருடன் எப்போதும்வென்றானில் உள்ள கோவிலுக்கு டூவிலரில் சென்றுள்ளார். நாலாட்டின்புதூர் அருகே சென்ற போது காற்றில் பறந்த ஜோதிமணியின் சேலை திடீரென இருசக்கர வானகத்தின் சக்கரத்தில் சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணி உயிரிழந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News April 7, 2025

தாய் இறப்பு இல்லாத மாவட்டமாகும் விருதுநகர்

image

கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் பிரசவகால தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2021- 22 இல் 1 லட்சம் பிரசவங்களில் 90 தாய்மார்கள் உயிரிழந்த நிலையில், 22 – 23 இல் 52 ஆகவும், 23- 24 இல் 45 ஆகவும் குறைந்துள்ளது. விருதுநகரில் 23 – 24 இல் 7991 பிரசவங்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு வரலாற்று சாதனையாகும். நாட்டில் முதன்முறையாக விருதுநகர் தாய் இறப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

News April 7, 2025

விருதுநகர் அமைச்சர்கள் வழக்கில் நீதிபதி விலகல்

image

விருதுநகர் அமைச்சர்களாக தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் மற்றும் இவர்களது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை மறு விசாரணை நடத்த என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அமைச்சர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!