News April 3, 2024

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

image

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ₹52,000ஐ தொட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹52,000க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹6,500க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ₹2 உயர்ந்து ஒரு கிராம் ₹84க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹84,000க்கும் விற்பனையாகிறது.

Similar News

News January 2, 2026

இவர்தான் ஸ்பெயின் நாட்டின் வருங்கால ராணி!

image

ஸ்பெயின் மன்னர் Felipe VI-யின் மகளான லியோனோர் (20), விரைவில் ராணியாக முடிசூட உள்ளார். அழகாக இருப்பது மட்டுமின்றி, வீரதீர செயல்கள் புரிவதில் வல்லவராகவும் இவர் உள்ளார். ராணுவம், கடற்படை, விமானப்படையில் பயிற்சி பெற்ற அவர், பல மொழிகள் பேசுவதிலும் வல்லவராக உள்ளார். சமீபத்தில் PC-21 விமானத்தை தனியாக இயக்கி உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார். 20 வயதிற்குள்ளாகவே தன் திறமையை நிரூபித்துள்ளார் ஸ்பெயின் இளவரசி.

News January 2, 2026

நடிகை நந்தினி மரணத்தில் அதிர்ச்சி தகவல்

image

<<18703577>>நடிகை நந்தினியின் மரணம்<<>> குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அண்மையில் அவரது தந்தை இறந்த நிலையில், அவரின் அரசுப் பணி கருணை அடிப்படையில் நந்தினிக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், நடிப்பில் ஆர்வமாக இருந்த நந்தினி, அரசுப் பணியை ஏற்க மறுத்துள்ளார். இதனால், தாயுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் மனமுடைந்து விபரீத முடிவை எடுத்துள்ளாராம்.

News January 2, 2026

எந்த ஜூஸ் எந்த உறுப்புக்கு நல்லது?

image

உடலின் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு உறுப்பும் சரியாக செயல்படுவதில்தான் உள்ளது. உறுப்புகளின் செயல்திறனை மேம்படுத்த உதவும் ஜூஸ்கள், உடலின் இயல்பான சமநிலையை பாதுகாக்க செயல்படுகிறது. அந்த வகையில், எந்த உறுப்புக்கு எந்த ஜூஸ் நல்லது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!