News April 7, 2025
நேர்த்தி கடன் செலுத்த வினோத உடை

கமுதி, செங்கப்படை கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவில் சாக்குகளை பேண்ட் & சட்டை வடிவில் அணிந்து கொண்டு முகத்தையும் மூடிய படி ஊர்வலத்தில் கலந்து கொள்வர். முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டபோது கும்மி மேள தாளங்களுடன் சாக்கு ஆடை அணிந்த பக்தர்களும் நடனம் ஆடி செல்வர். இதனை கிராம மக்கள் நேர்த்திகடனாக செலுத்தி வருகின்றனர். *ஷேர்
Similar News
News April 11, 2025
மீனவர்களுக்கான இன்றைய(ஏப்.11) வானிலை அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.11) காற்றின் வேகம் 22 கிலோமீட்டர்/மணி முதல் 43 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
News April 11, 2025
ஜிப்லி புகைப்படங்கள் – ராமநாதபுரம் காவல்துறை எச்சரிக்கை

“ஜிப்லி படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள், அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு விளைவிக்கக்கூடிய சேனல்கள் மூலம் பெறும்போது சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது” ஜிப்லியை சுற்றியுள்ள ஆபத்துகளை பயனர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதிகமாக ஜிப்லி பயன்படுத்தும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்க.