News April 7, 2025
கணவரை விவாகரத்து செய்கிறாரா மேரி கோம்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தந்த EX குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், கணவர் ஆன்லரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு குத்துச்சண்டை வீராங்கனையின் கணவரும், மேரி கோமும் காதலித்து வருவதாகவும், கோமின் பிஸினஸ் பார்ட்னராக அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 பேரும் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என மேரி கோம் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 12, 2025
தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. அதேபோல், திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாகை, அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடையுடன் செல்லுங்கள்..
News April 12, 2025
ராம்போ பட இயக்குநர் டெட் காலமானார்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் டெட் கோட்செஃப் (94) காலமானார். உலகம் முழுக்க புகழ்பெற்ற சில்வெஸ்டர் ஸ்டலோனின் ஆக்சன் படமான ‘ராம்போ: ஃபர்ஸ்ட் பிளட்’ படத்தை டெட் தான் இயக்கினார். இயக்குநர், தயாரிப்பாளர் என திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் கோலோச்சிய அவர், வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP
News April 12, 2025
ஏன் 9வது விக்கெட்டுக்கே வருகிறார் தோனி?

அணி ரன் இல்லாமல் தவிக்கிறது. அஸ்வின், தீபக் ஹூடா இறங்கியப்பிறகே, 9வது விக்கெட்டுக்கு களமிறங்குகிறார் தோனி. இது மோசமில்லையா? ஃபார்மில் இல்லாத வீரரும், பவுலரும் ஏன் அவருக்கு முன்னாடி இறங்கணும். ஏன் இப்படி செய்கிறார் தோனி? என ஒரு தரப்பு நெட்டிசன்கள் கொதித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில், மற்றொரு தரப்பு அவருக்கு எப்படி விளையாடணும் எனத் தெரியும் என்றும் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?