News April 7, 2025
சிறுமியிடம் சில்மிஷம்: பிரபல மத போதகர் மீது போக்சோ

மேடைகளில் ஆடிப்பாடி கிறிஸ்தவ மதம் குறித்து போதனை செய்யும் ஜான் ஜெபராஜ் ஞாபகம் இருக்கிறதா? இவர்தான் தற்போது போக்சோ வழக்கில் சிக்கியிருக்கிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரைத் தேட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 31, 2025
மணிப்பூருக்கு செல்லும் பிரதமர் மோடி?

PM மோடி வரும் செப்டம்பர் 2-ம் வாரத்தில் மணிப்பூருக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசுவதுடன், பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் வெடித்த இனக்கலவரத்துக்கு பிறகு ஒருமுறை கூட PM அங்கு செல்லவில்லை என கண்டனங்கள் வலுத்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் அவர் அங்கு செல்லவுள்ளார்.
News August 31, 2025
டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் அமலாகிறது

TASMAC கடைகளில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலாகிறது. வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் காலி மது பாட்டில்களால் விலங்குகள் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க கஸ்டமரிடம் பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக பெற்று, பாட்டிலை திருப்பி தரும்போது ₹10 ஒப்படைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டம் சிவகங்கை, மதுரை, காஞ்சி, திருவள்ளூரில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
News August 31, 2025
விஜய்யை விமர்சிக்காத EPS.. டெல்லி பாஜகவின் ப்ளான்?

மாநாட்டில் விஜய், அதிமுகவை சாடியும், EPS பெரிய அளவில் அதற்கு பதிலடி கொடுக்கவில்லை. இதற்கு, கூட்டணியில் விஜய்யை இணைப்பது எங்கள் பொறுப்பு எனவும் அதனால் அவரை விமர்சிக்கவேண்டாம் என்றும் டெல்லியின் புள்ளிகள் போட்ட கண்டிஷன் தான் காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகளில் பாதிக்கு பாதி தொகுதிகளை தவெக கேட்டதாக சொல்லப்பட்டது. இதனால் மீண்டும் என்ன நடக்குமோ என EPS திண்டாடுகிறாராம்.