News April 7, 2025
பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை குபேரபுரீஸ்வரர் கோயில்

தஞ்சை வெண்ணாற்றின் தெற்கு கரையோரம் அமைந்துள்ளது இந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில். குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள இறைவன் குபேரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தீபாவளி திருநாளிலும், பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என கூறப்படுகிறது. இதை SHARE செய்யவும்
Similar News
News December 31, 2025
தஞ்சையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

பாபநாசம் தாலுகா உள்ளிக்கடை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் 65 வயது மூதாட்டி, கூலி வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மும்மூர்த்தி (46) என்பவர், மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில், போலீசார் மும்மூர்த்தியை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 31, 2025
தஞ்சை: பணம் மோசடி – அரசு ஊழியர் மீது புகார்

கும்பகோணத்தில் மாற்றூத்திறனாளியான மகாலட்சுமி, தனது மகள்களின் திருமணத்திற்காகச் சேமித்த ரூ.2.50 லட்சத்தை, அரசு ஊழியரான மணிகண்டன் என்பவர் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். 2019-ல் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தர மறுத்த மணிகண்டன், அதிகார பலத்தால் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் பணத்தை மீட்டு தர மகாலட்சுமி, கோரிக்கை மனு அளித்துள்ளார்.
News December 31, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.30) இரவு 10 முதல் இன்று (டிச.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


