News April 7, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அங்கன்வாடி பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 138 அங்கன்வாடி பணியாளர்கள்,133 அங்கன்வாடி உதவியாளர்கள், 14 குறு அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 285 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News April 13, 2025
கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி, காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாய கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 12, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்