News April 7, 2025

அதிமுகவில் அண்ணன், தம்பி போல் இருக்கிறோம்

image

அதிமுகவில் எந்த விரிசலும் இல்லை; அண்ணன், தம்பி போல உள்ளோம் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததால், செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார் எனவும் EX மினிஸ்டர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நிர்மலா உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் கூடத்தான் நட்டாவை சந்தித்தேன்; தொகுதி பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர்களை MLAக்கள் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் நாசூக்காக பதிலளித்தார்.

Similar News

News April 11, 2025

ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு குடும்பமே பலியான சோகம்!

image

நீங்கள் மேலே பார்க்கும் போட்டோ Siemens நிறுவன சிஇஓ Agustin Escobar-ன் அழகிய குடும்பம். அமெரிக்காவுக்கு இன்பச் சுற்றுலா சென்றவர்களுக்கு அதுவே கடைசி பயணமாக அமைந்துவிட்டது. நேற்று மாலை அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் ஹட்சன் நதியில் <<16059268>>விழுந்து நொறுங்கியதில்<<>> அகஸ்டின் எஸ்கோபார் அவரது 3 குழந்தைகள், மனைவி, விமானி 6 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். USA அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News April 11, 2025

AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!

image

AI வளர்ச்சி பல துறைகளில் மனிதனை ஓரங்கட்ட தொடங்கி விட்டது. AI உதவியுடன், உலகில் முதல் குழந்தை பிறந்துவிட்டது. மெக்சிகோ நாட்டை சேர்ந்த 40 வயது பெண்ணிற்கு IVF முறையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. IVF என்பது, Intracytoplasmic sperm ஊசியின் மூலம், நேராக கருமுட்டையில் விந்தணுவை மனித உதவியுடன் செலுத்தப்படுவதாகும். ஆனால், AI வந்துவிட்டதால், இனி மனித உதவி தேவைப்படாது. இன்னும் என்னலாம் மாறப்போகிறதோ!

News April 11, 2025

த்ரிஷாவை ஓரங்கட்டிய பிரியா வாரியர், சிம்ரன்

image

இன்று காலையில் இருந்து ட்ரெண்டிங் பிரியா வாரியர் தான். தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டிற்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை vibe ஆக்கிவிட்டார். அதே போல, கேமியோ ரோலில் வரும் சிம்ரனுக்கும், அஜித்துக்குமான கெமிஸ்ட்ரி விசில் சத்தத்தை அள்ளுகிறது. படத்தில் ஹீரோயின் த்ரிஷா தான் என்றாலும், ரசிகர்களை கவர்ந்தது என்னவோ சிம்ரனும், பிரியா வாரியரும் தான். நீங்க படம் பாத்தாச்சா.. மூணு பேரில் யாரு பெஸ்ட்?

error: Content is protected !!