News April 7, 2025
வாலிபரை எரித்து கொன்ற வழக்கில் 3வது நபர் கைது

பர்கூர் வனப்பகுதியில் மார்ச் 30ம் தேதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரிந்தது. இந்த வழக்கில் வெங்கடேஷ் (32) மற்றும் ராஜேந்திரன் (48) என்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குமார் என்பவரை பர்கூர் போலீசர் தற்போது கைது செய்துள்ளனர்.
Similar News
News April 13, 2025
ஈரோடு: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் தனியார் கடைகள், வர்த்தக, உணவு நிறுவனங்கள், மே 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். இந்த பெயர் பலகை தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும், அதன் பின் விரும்ப மொழியிலும் அமைக்கலாம். கால அவகாசத்திற்கு பின் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
News April 13, 2025
ஈரோடு: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News April 13, 2025
ஈரோடு: ஏர்கன்னால் சூட்டதில் ஒருவர் காயம்!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள, ஜிஎஸ் காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், சொந்தமாக ‘ஏர்கன்’ வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம், இவரது வீட்டிலிருந்த சிறுவர்கள், எதிர்பாராதவிதமாக ஏர்கன்னை எடுத்து வெங்கடாச்சலத்தை சுட்டுள்ளனர். இதில் இடுப்பின் கீழ் பகுதியில், அலுமினிய குண்டு பாய்ந்தது, வெங்கடாச்சலம் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.