News April 7, 2025
காஞ்சியில் கண்டிபாக போக வேண்டிய அம்மன் கோவில்கள்

அங்காளபரமேஸ்வரி கோவில்-உத்திரமேரூர், பிடாரிவிளக்காத்தம்மன் கோவில்-அஞ்சுர், முத்தாலம்மன் கோவில்-சிறுமாங்காடு, கனகதுர்க்கையம்மன் கோவில்-கோனேரிகுப்பம், தீப்பாஞ்சீயம்மன் கோவில்-காஞ்சி, பஜனை பொன்னியம்மன் கோவில்-ஈசுர், அஞ்சுரம்மன் கோவில்-பாக்கம், முத்துகோலாட்சியம்மன் கோவில்-புத்தகரம், கந்தபொன்னியம்மன் கோவில்-தும்பவனம், ஆகாயகன்னியம்மன் கோவில்-பிள்ளயைார் பாளையம். *கண்டிப்பாக போங்க. நண்பர்களுக்கு பகிரவும்
Similar News
News April 8, 2025
கலெக்டர் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (ஏப்ரல் 7) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தனது மகளுடன் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர், போலி ஆவணங்கள் மூலம் தனது நிலத்தை அபகரிப்பதாக மனு கொடுக்க வந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் மூதாட்டியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 107 அங்கன்வாடி பணியாளர், 11 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 79 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
News April 7, 2025
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம், தயாா்குளம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று (ஏப்ரல் 6) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் குழுவினர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.