News April 7, 2025
பங்குச்சந்தைகளில் கடும் சரிவு.. சென்செக்ஸ் 2,227 வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் கடும் சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிந்து 73,137ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 742.85 புள்ளிகள் (3.24%) வீழ்ச்சியடைந்து 22,161.60ஆக வர்த்தகமானது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் தவிர்த்த அனைத்து நிறுவன பங்குகளும் வீழ்ச்சி கண்டன. டாடா ஸ்டீல் பங்குகள் 7.33%, L&T பங்குகள் 5.78% சரிந்தன.
Similar News
News April 8, 2025
பில் கேட்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கின்றேன். *ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பணத்தினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. *என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை.
News April 8, 2025
10 ஆண்டுக்கு பின் மும்பையை சாய்த்த RCB

நேற்றைய ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை பெங்களூரு அணி வீழ்த்தியது. பத்தாண்டுகளுக்கு பின் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை RCB வீழ்த்தியுள்ளது. மும்பையின் கோட்டையில் வைத்தே அந்த அணிக்கு RCB அதிர்ச்சி கொடுத்துள்ளது. 5 போட்டிகளில் விளையாடிய மும்பை அணிக்கு இது 4வது தோல்வி. வெற்றிக்காக கடைசிவரை போராடிய மும்பை அணி இறுதியில் இலக்கை எட்ட முடியவில்லை. அப்போ ஈசாலா கப் நமதே வா?
News April 8, 2025
மும்பை தாக்குதல் குற்றவாளி.. US நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று மும்பை தாக்குதல் குற்றவாளியான தஹவ்வூர் ராணா அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தஹவ்வூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு கொண்ட ராணா அமெரிக்காவில் கடந்த 2009-ல் பிடிபட்டார்.