News April 7, 2025

மேட்டூரில் பாலியல் தொழில்: தம்பதி கைது

image

எடப்பாடியை சேர்ந்த பாக்கியம், அவரது கணவர் பழனிச்சாமி ஆகியோர், மேட்டூரில் ‘திருமண தகவல் மையம்’ என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற மேட்டூர் போலீசார், தம்பதியினரை கைது செய்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்களை மீட்டனர். மேலும், ஓமலூர் பெண்கள் காப்பகத்தில் அந்த பெண்களை ஒப்படைத்தனர்.

Similar News

News April 8, 2025

சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

வார இறுதி நாட்கள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து ஓசூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கோவை, சென்னை, பெங்களூரு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News April 8, 2025

ஏப்.15- ல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

image

கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்த ஐஸ் வாட்டர் குடிப்பதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதிலிருந்து விடுபட மண் பானையில் வைக்கப்பட்ட நீரை அருந்தலாம். இதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாது சத்துக்கள் ஜீரண சக்தியை உருவாக்கும் என சேலம் மருத்துவர் தனபால் அறிவுறித்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!