News April 7, 2025
கிரிக்கெட்டை தொலைத்துவிட்டார் தோனி

CSK அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட்டை தொலைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் விமர்சித்துள்ளார். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 26 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இது குறித்து பேசிய ஹெய்டன், தோனி அவரது மோசமான ஆட்டத்தை ஒப்புக்கொண்டு எங்களது வர்ணனையாளர் குழுவுடன் வந்து இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News April 12, 2025
பாஜக, அதிமுக இயற்கையான கூட்டாளிகள்: நயினார்

பாஜக- அதிமுக இயற்கையான கூட்டாளிகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக புதிய தலைவராக அவர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பாஜக, அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் வெல்லும் என்று தெரிவித்தார். நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட MLA- க்களைக் கொண்ட பாஜகவுக்கு மாநில தலைவராக இருப்பது தனக்கு கிடைத்த கெளரவம் என்றும் கூறினார்.
News April 12, 2025
‘கதக்’ கலைஞர் குமுதினி காலமானார்

இந்தியாவின் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்களில் ஒருவரான குமுதினி லக்கியா(95), வயது மூப்பு காரணமாக அகமதாபாத்தில் காலமானர். கதக் நடனத்துக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட குமுதினிக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி அரசு கவுரவித்துள்ளது. கதக் நடன வளர்ச்சிக்காக ‘கடம்ப் செண்டர் ஃபார் டான்ஸ்’ அமைப்பையும் அவர் நடத்தி வந்தார்.
News April 12, 2025
சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் பொன்முடி

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி தாம் பேசிய பேச்சுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார். தபெதிக விழாவில் பேசியபோது பெண்கள், சைவம், வைணவம் குறித்த அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கனிமொழி உள்ளிட்டாேர் கண்டனம் தெரிவித்ததால், திமுகவில் அவரது பதவி பறிக்கப்பட்டது.