News April 7, 2025

JUST IN: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க..

Similar News

News April 8, 2025

கீரனூர் அருகே குழந்தையை கொலை செய்த தாய் கைது

image

கீரனூர் அருகே புலியூரில் 5 மாத ஆண் குழந்தையை கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாய் லாவண்யா-வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே 5 மாத ஆண் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 7, 2025

புதுகை மாவட்டத்தில் அங்கன்வாடியில் வேலை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் டீச்சர் (281), உதவியாளர் (196) ஆகிய பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)

News April 7, 2025

புதுகை மாவட்ட அங்கன்வாடி பணி : தமிழக அரசு அறிவிப்பு

image

புதுகை அங்கன்வாடி
டீச்சர் 281 – பேர்.
உதவியாளர் – 196 பேர் பணியிடத்திற்கு
தமிழக அரசு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறதுஇப்பணிகளுக்கென 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!