News April 7, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.06) பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 24.02 மில்லி மீட்டர், இராமேஸ்வரத்தில் 20 மில்லி மீட்டர், மண்டபத்தில் 17.02 தங்கச்சிமடத்தில் 10.04 மில்லி மீட்டர், முதுகுளத்தூரில் 2 மில்லி மீட்டர், கமுதியில் 02.08 மில்லி மீட்டர், பரமக்குடி 02.04 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. *ஷேர்
Similar News
News April 8, 2025
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர் கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல் 8) நண்பகல் 2மணி முதல் மாலை 4 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100(அ) 100ஐ அணுகவும்.
News April 8, 2025
முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த மீனவ பிரதிநிதிகள்

இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் கூட்டமைப்பினர் இன்று (ஏப்.08) சென்னையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் சந்தித்து மீனவ பெருமக்களின் நல்வாழ்விற்காக ரூ.576.73 கோடி செலவில் பல்வேறு புதிய திட்டங்கள் தந்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.
News April 8, 2025
மீனவர்களுக்கான இன்றைய வானிலை அறிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.8) காற்றின் வேகம் 06 கிலோமீட்டர்/மணி முதல் 09 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.