News April 7, 2025
இந்தியாவுக்கு விசா வழங்க சவுதி தடை: காரணம் என்ன?

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு உம்ரா மற்றும் பிசினஸ் விசாக்கள் வழங்குவதை சவுதி தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த விசாவில் வருபவர்கள் அப்படியே சட்டவிரோதமாக தங்கிவிட்டு ஹஜ் யாத்திரையையும் முடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாக சவுதி அரசு கருதுகிறது. இதை தவிர்க்கவே ஜூன் மாதம் வரை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
Similar News
News April 8, 2025
13,000 ஆண்டுகளுக்குப் பின் மறு பிறப்பு

Dire Wolf என்ற ஓநாய் இனம் 13,000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்து முற்றிலுமாக மறைந்தது. இதுகுறித்து, Game of Thrones என்ற ஆங்கில வெப் சீரிஸில் பேசியிருப்பார்கள். அந்த ஓநாய்களின் DNAக்களைக் கொண்டு ஆய்வாளர்கள் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். ரெமுஸ் & ரோமுலஸ் என்ற பெயர் கொண்ட இந்த இரண்டு ஓநாய்கள்தான் அழிந்து போன உயிரினத்தில் இருந்து பிறந்த முதல் உயிரினங்கள்.
News April 8, 2025
18 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள்.. அரசு தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் TN முழுவதும் 18,46,013 புது ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், மே 2021 முதல் மார்ச் 2025 வரை புது ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 முதல் ஆதார் மற்றும் செல்போன் எண்களின் பதிவு அடிப்படையில் மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
News April 8, 2025
அதிரடி காட்டிய LSG ஓப்பனர்ஸ்

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதில், மார்க்ரம் 28 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்து, ஹர்ஷித் ராணா பந்தில் போல்ட் ஆனார். மற்றொரு வீரரான மார்ஷ், அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இதுவரை, 11 ஓவர்கள் பேட்டிங் செய்திருக்கும் லக்னோ அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் குவித்துள்ளது.