News April 7, 2025
வக்ஃப் சட்டத்தை அமல்படுத்தும் கேரளா!

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்யும்போது கேரளா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, சட்டமாகியுள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக அந்தச் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தை ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதலில் எழுந்த கடும் எதிர்ப்பு, இப்போது எப்படி காணாமல் போனது? கமெண்ட் செய்யுங்கள்!
Similar News
News August 30, 2025
பள்ளியில் குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி

கர்நாடகாவில் அரசு பள்ளி பாத்ரூமில் 9-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கி படித்துவரும் அந்த மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. ஆனால், கர்ப்பமானதை மறைத்த அவர், பள்ளிக்கு சென்றபோது வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது, இளைஞரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 30, 2025
மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: CM ஸ்டாலின்

USA-ன் 50% வரியால் தமிழ்நாட்டின் இழப்பு 3.93 பில்லியன் டாலராக இருக்கும் எனவும், இவ்விவகாரத்தில் மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு தயார் என குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News August 30, 2025
அஜித்- ஆதிக் படம் கேன்சலா?

பட அறிவிப்பின் போதே, Digital & Satellite உரிமத்தை விற்றுதான், பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கி பலரும் படம் தயாரிக்கின்றனர். அந்த திட்டத்தில் தான், அஜித்- ஆதிக் பட தயாரிப்பாளர் ராகுலும் இருந்துள்ளார். ஆனால், சம்பளம் வாங்காமல், இந்த இரு உரிமங்களையும் அஜித் வாங்கிவிட்டதால், ராகுல் பணம் புரட்ட முடியாமல் தவிக்கிறாராம். இதனால், படத்தை ராகுல் கைவிட்டு விடுவார் எனக் கூறப்படுகிறது. Wait and See!