News April 7, 2025
பரஸ்பர வரி விதிக்குமா? இந்தியாவின் முடிவு என்ன?

அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் சீனா பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை உயர்த்த தயாராகி வருகின்றன. ஆனால், இந்தியா இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்புகிறது. முதல் நாடாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து ஆசிய நாடுகளை ஓரங்கட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
Similar News
News April 19, 2025
1 கிலோ எலுமிச்சை ரூ.120

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் கூல் டிரிங்ஸ், பழச்சாறு, எலுமிச்சை சாறு அருந்துகின்றனர். இதனால் எலுமிச்சை தேவை அதிகரித்துள்ளது. ஆனால் போதிய வரத்து இல்லை. இதனால் சென்னையில் எலுமிச்சை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ எலுமிச்சை ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இதனால் எலுமிச்சை வாங்க வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உங்கள் ஊரில் எலுமிச்சை விலை என்ன?
News April 19, 2025
தினம் ஒரு வாழைப்பழம்

நமது வயிற்றுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருப்பது நார்ச்சத்து (Fiber). அது வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கிறது (3 கிராம்). ஆகையால், தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது வயிற்றுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு ஆரம்ப காலங்களில் தினம் ஒரு வாழைப்பழத்தை கொடுத்து வளர்த்தால், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்குமாம்.
News April 19, 2025
புற்றுநோய்: பிரிட்டன் கால்பந்து வீரர் திடீர் உயிரிழப்பு

பிரிட்டன் கால்பந்து வீரர் ஜோ தாம்சன் (36) புற்றுநோய் பாதித்து உயிரிழந்துள்ளார். புற்றுநோய் தீவிரமானதால் அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் வீட்டில் தனது உறவினர்கள் மத்தியில் உயிரிழக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், ஜோ தாம்சன் உயிர் பிரிந்தது. இந்தத் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் மனைவி பகிர்ந்துள்ளார்.