News April 7, 2025

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை!

image

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வரை வடமேற்கு திசையில் நகரும் எனவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மத்திய கடலில் வடக்கு நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது.

Similar News

News October 22, 2025

Sports Roundup: தமிழ் தலைவாஸ் 11-வது தோல்வி

image

*புரோ கபடியில் பெங்கால் வாரியர்ஸ் 44-43 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. *ஐசிசி மகளிர் ODI பேட்டிங் தரவரிசையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். * மகளிர் நட்புறவு கால்பந்தில், ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. *பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன், முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வி.

News October 22, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 22, ஐப்பசி 5 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்:9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்:7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News October 22, 2025

இந்தியா மீதான பாகிஸ்தான் குற்றச்சாட்டு.. ஆப்கன் பதிலடி

image

ஆப்கன் உடனான மோதலுக்கு இந்தியாவே காரணம் என பாக்., குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது என ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் முகமது யாகூப் மறுத்துள்ளார். இந்தியா உடனான தங்களது நட்பு தொடரும் எனவும், ஆப்கனின் நலன் சார்ந்தே நட்புறவு பேணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பிற நாடுகளுக்கு எதிராக தங்களது பிராந்தியத்தை பயன்படுத்த எப்போது அனுமதிக்கமாட்டோம் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!