News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
மகிழ்ச்சி பரவ தலைவர்களின் தீபாவளி வாழ்த்துகள்

*அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள் – கவர்னர் ஆர்.என்.ரவி
*துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் – EPS
*நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ராமதாஸ்
*நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: செல்வப்பெருந்தகை
*இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும் – அன்புமணி
News October 20, 2025
சிறுநீரகம் செயலிழப்பு அறிகுறிகள் இதுதான்

சிறுநீரக நோய்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, சிறுநீரக நோய்கள் “அமைதியான கொலையாளிகள்” என்று அழைக்கப்படுகின்றன. சிறுநீரகம் செயலிழந்தால் சருமத்தில் வறட்சி, தொடர்ச்சியான அரிப்பு, சிவப்பு தடிப்புகள் அல்லது தோலின் நிறத்தில் படிப்படியாக மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. அப்படி இருந்தால் உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது.
News October 20, 2025
41 மரணங்களுக்கு விஜய்யே காரணம்: திமுக

விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்வதாக டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் 41 அப்பாவிகள் உயிரிழந்ததற்கு விஜய் தாமதமாக சென்றதே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கரூர் மரணங்களுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கரூருக்கு தாமதமாக சென்றதற்கான காரணத்தை சொல்லும் வரை திமுக விடப்போவதில்லை என ஏற்கெனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.