News April 7, 2025
தூத்துக்குடி பார் கவுன்சிலில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

தூத்துக்குடி நீதிமன்ற பார் கவுன்சிலில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு பதவிக்காலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் ஏப்.3 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இன்று மாலை மனுக்கள் பரிசீலனையும், 9ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2025
போச்சோ வழக்கில் 3 மற்றும் 5 ஆண்டு சிறை

தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த 9 மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மறவன் மடத்தை சேர்ந்த ஜெயராஜ், சூரிய ராஜ் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜோஸ்வா ராஜ் ஆகியோர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஜெயராஜ் மற்றும் சூரிய ராஜ்க்கு, 3 வருடம் சிறை தண்டனையும், ஜோஸ்வா ராஜ்க்கு 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
News April 9, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. “தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். ஒருவேளை இது சைபர் குற்றவாளிகள் உங்களுக்கு விரிக்கும் வலையாக இருக்கலாம்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் (அ) cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.
News April 9, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.