News April 7, 2025

மீனவர்களுக்கு ₹576 கோடியில் சிறப்புத் திட்டங்கள்: CM

image

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மீனவர்கள் நலனுக்காக ₹576 கோடியில் சிறப்பு திட்டங்களை CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தங்கச்சிமடத்தில் ₹150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், 7,000 மீனவர்களுக்கு உபகரணங்களுடன் பயிற்சி வழங்க ₹52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், 14,700 பேருக்கு மீன்பிடி சாராத தொழில்களுக்கு பயிற்சி அளிக்க ₹53 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என CM உறுதியளித்தார்.

Similar News

News August 30, 2025

RR அணியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட்!

image

RR அணியின் தலைமை பயிற்சியாளர் பணியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளதாக RR அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 2024-ல் RR அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகுகிறார் என கூறப்படும் நிலையில், ராகுல் டிராவிட்டின் இந்த திடீர் விலகல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

News August 30, 2025

₹1,000 உரிமைத் தொகை.. உதயநிதி சொன்ன குட் நியூஸ்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைய 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக DCM உதயநிதி தெரிவித்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். அலட்சியமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News August 30, 2025

இதுக்கு சரியாக பதில் சொல்லுங்க பார்ப்போம்?

image

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. 1= 4, 2= 16, 3= 64, அப்போ 4= ? என்ன வரும் யோசிச்சு பாருங்க. HINT: இந்த கணக்கில் 1= 4 எப்படி வந்தது என மட்டும் கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்க. பதில் கிடைக்கும். எத்தனை பேர் சரியா பதில் கமெண்ட் பண்றீங்க’னு பாப்போம்? பதில் நாளைய கேள்வியுடன் வெளிவரும்.

error: Content is protected !!