News April 7, 2025
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 13 – முதல் மே 4 வரை ஒரு மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்தும் (வ. எண்.06012), தாம்பரத்தில் இருந்து(வ. எண்.06011) திங்கட்கிழமையும் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறையில் இது சென்னை செல்வோருக்கு பயனுள்ளதாக அமையும்.
Similar News
News April 8, 2025
மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பல்

நாகர்கோவில் கீழமறன் குடியிருப்பை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் என்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாட சென்ற இவரை 18 வயதிற்குட்பட்ட 4 பேர் கொண்ட கும்பல் பீர்பாட்டிலால் தலையில் அடித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் 4 பேரையும் போலீசார் தேடி வரும் நிலையில் முதற்கட்ட விசாரனையில் தோழியை கிண்டல் செய்ததால் தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது.
News April 7, 2025
தோவாளை மலர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று (ஏப்.07) 1 கிலோ பிச்சி ரூ.1100, மல்லி ரூ.650, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.300, வாடாமல்லி ரூ.60, கிரேந்தி ரூ.70 கோழிக்கொண்டை ரூ.60, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.140, மஞ்சள் செவ்வந்தி ரூ.220, வெள்ளை செவ்வந்தி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.70, தெத்தி ரூ.80 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
News April 7, 2025
குமரியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 120 அங்கன்வாடி பணியாளர்கள், 2குறு அங்கன்வாடி பணியாளர், 11அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.