News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 04 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <
Similar News
News January 14, 2026
தி.மலை: ஆன்மீக சுற்றுலா வந்த வேன் விபத்து!

குஜராத், ஆனந்த் மாவட்டத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் காஞ்சிபுரம் கோயில்களுக்கு சென்றுவிட்டு வேனில் வந்தவாசியை அடுத்த பொன்னூரில் உள்ள கோயிலுக்கு நேற்று சென்று கொண்டிருந்தனா். இந்த வேன் வெண்குன்றம் அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 6 பேர் வந்தவாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வந்தவாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 14, 2026
தி.மலை: உலா வரும் மர்ம விலங்கு – மக்கள் அச்சம்!

ஜவ்வாது மலையடிவாரத்தில் மேல்வன்னியனூரில், சில தினங்களுக்கு முன்பு 4 கன்று குட்டிகள் & 2 நாய்களை மர்ம விலங்கு கடித்து கொன்றுள்ளது. மேலும், நேற்று முன்தினம் கிடாம்பாளையம், வதியன் கோட்டையில் கன்று குட்டிகளை கடித்து கொன்றுள்ளது. இறந்த விலங்குகளில் புலியின் தடயங்கள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
News January 14, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (13.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். தாலுக்கா வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் தனி தொலைபேசி எண் இங்கே வழங்கப்பட்டுள்ளது தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


